
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அனுஷ்கா. பிரம்மாண்ட படங்களில் அசத்தலான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தவர்.
இஞ்சி இடுப்பழகி என்ற படத்திற்காக எடையை கூட்டிய அவர் அதன் பின்னர் எடையை குறைக்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்.
இதனால் நெட்டிசன்களும் இவரை ஆன்டி ஆன்டினு கிண்டலடித்து வருகின்றனர். கேலி கிண்டல்களை பொறுத்து கொள்ள முடியாத அனுஷ்கா தற்போது அதிரடியான முடிவை எடுத்துள்ளார்.
அது என்னவென்றால் பாலிவுட் நடிகைகளை போல ஒல்லியாக வேண்டும் என்பதற்காக வெளிநாட்டிற்கு சென்று இயற்கை வைத்தியம் செய்து கொண்டு உடல் எடையை குறைக்க உள்ளாராம். விரைவில் தன்னை கிண்டலடித்தவர்களை வாயடைக்க வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.