Annathae Vs Valimai Release

மீண்டும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அஜித் திரைப்படங்கள் நேருக்கு நேர் மோத உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Annathae Vs Valimai Release : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ஒன்று விசுவாசம். சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி இருந்த இந்த திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தோடு நேருக்கு நேர் மோதியது.

இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக மீண்டும் இவர்கள் இருவரின் படங்களும் நேருக்கு நேர் மோதிக் கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

அதாவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது அண்ணாத்த என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தினை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் எச் வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகிவரும் வலிமை திரைப்படத்தையும் படக்குழு வரும் தீபாவளிக்கு வெளியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்த முறை போட்டியில் ஜெயிக்க போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.