Annapoorani Movie Review
Annapoorani Movie Review

நயன்தாரா, ஜெய், சத்தியராஜ், கே எஸ் ரவிக்குமார் நடிப்பில் வெளியான அன்னபூரணி திரைப்படம் எப்படி இருக்கு என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

இந்திய சினிமாவில் பல மொழிகளில் நடித்து பட்டய கிளம்பி வருகிறார் நடிகை நயன்தாரா. இவர் தற்போது அறிமுக இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் அன்னபூரணி என்ற படத்தில் நடித்துள்ளார்.

படத்தின் கதைக்களம் :

ஶ்ரீரங்கம் கோவிலில் சமையல் சேவை செய்யும் ஆச்சரியமான குடும்பத்தில் பிறந்தவர் தான் அன்னபூரணி ( நயன்தாரா). மீன் வாசம் கூட பிடிக்க விடாமல் பல கட்டுப்பாடுகளுடன் அப்பா மகளாக வளரும் இவர் உலகமே பாராட்டும் செஃப்பாக வேண்டும் என ஆசைப்படுகிறார்.

ஆனால் குடும்ப கட்டுப்பாடுகளை தாண்டி ஒரு கட்டத்தில் தனது லட்சியமாக முக்கியம் என வீட்டை விட்டு வெளியே வந்து தன்னுடைய இன்ஸ்பிரேசனான செஃப் சத்தியராஜை சந்திக்கிறார். அவரும் அன்னபூரணிக்கு உதவ முடிவெடுக்கிறார்.

ஆனாலும் நயன்தாராவை சுற்றி இருக்கும் கட்டுபாடுகள் என்ன? அவரது கனவு நனவானதா என்பது தான் இந்த படத்தின் கதைக்களம்.

YouTube video

படத்தை பற்றிய அலசல் :

நயன்தாரா ஒன் மேன் ஆர்மியாக படத்தின் கதையை தனது தோல் மீது சுமக்கிறார்.

சத்தியராஜ், கே எஸ் ரவிக்குமார் நடிப்பு படத்திற்கு கூடுதல் பலம். ஜெய், நயன் ஜோடி ராஜா ராணி கெமிஸ்ட்‌ரியை கண் முன் கொண்டு வருகிறது.

தமனின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம்.

“ஜெயிச்சாலும் தோத்தாலும் நான் அப்பவே சொன்னேன் இல்ல அப்படினு சொல்ல ஆளுங்க இருப்பாங்க”, “எந்தக் கடவுளும் கறி சாப்பிடக்கூடாதுனு சொல்லல”, “பிரியாணிக்கு ஏது மதம், அது ஒரு எமோஷன் ” போன்ற டயலாக்குகள் அப்ளாஸ் அள்ளுகின்றன.

இயக்குனர் பார்த்து சளித்த கதையை கையில் எடுத்தாலும் அதை வித்தியாசமாக கொண்டு போய் ரசிக்க வைத்துள்ளார்.

REVIEW OVERVIEW
அன்னபூரணி திரை விமர்சனம்
annapoorani-movie-reviewமொத்தத்தில் அன்னபூரணி அற்புதம்.