கூலி படம் எப்படி இருக்கு? அனிருத் சொன்ன தகவல்..!

கூலி படம் குறித்து அனிருத் பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.மேலும் ஸ்ருதிஹாசன்,சத்யராஜ், உபேந்திரா, நாகார்ஜுனா போன்ற பல பிரபலங்கள் எந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படம் குறித்த இசையமைப்பாளர் அனிருத் கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அதாவது கூலி திரைப்படத்தை முழுமையாக பார்த்து விட்டேன் வேறொரு ஷேடில் உள்ளது சூப்பரா இருக்கு உற்சாகமாக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இவரின் இந்த பதிவு இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே எக்கச்சக்க எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஆகஸ்ட் 14ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
