ஜெயிலர் திரைப்படத்தின் FDFS ல் குக்கும் பாடலை பாடி ரசிகர்களை உற்சாகம் செய்த அனிருத்தின் வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பிரபலம் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். தனது இசையால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருக்கும் இவர் தற்போது ரஜினியின் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படத்திற்கும் இசையமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் ஜெயிலர் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை சென்னையில் உள்ள திரையரங்கில் இசையமைப்பாளர் அனிருத் கண்டுகளித்துள்ளார். அப்போது, ஜெயிலர் படத்தில் இடம்பெற்றுள்ள “Hukum” பாடலில் இருந்து ‘பட்டத்த பறிக்க நூறு பேரு, குட்டி சுவத்த எட்டி பார்த்தா உசுற கொடுக்க நூறு பேரு’ என்ற வரிகளை பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார். அதன் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.