ஒரு ரசிகனாக ‘கூலி’ படம் பார்க்க காத்திருக்கிறேன்: அனிருத் உற்சாகம்..

Web Ads

கார்த்தி, விஜய், கமல் நடிப்பில் படங்களை இயக்கி ஹிட்டடித்த லோகேஷ் கனகராஜ் , முதன்முறையாக ‘கூலி’ படத்தின் வாயிலாக ரஜினியுடன் கூட்டணி அமைத்துள்ளார். வழக்கமாக அவரின் படங்கள் எல்சியூவின் கீழ் உருவாகும் நிலையில் ‘கூலி’ படத்தினை தனிக்கதையாக இயக்கியுள்ளார். தாராளமாய் ஆக்சனை தெறிக்க விட்டுள்ளார்.

இப்படத்தில் சத்யராஜ், ஸ்ருதிஹாசன், நாகர்ஜுனா, உபேந்திரா, சவுபின் சாகீர், அமீர்கான் ஆகியோர் நடித்துள்ளனர். அத்துடன் பூஜா ஹெக்டே ‘மோனிகா’ பாடலுக்கு க்யூட் கிளாமராய் டான்ஸ் ஆடியுள்ளார்.

‘சிவா’ படத்திற்கு பிறகு – அதாவது 36 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி படத்துக்கு சென்சாரில் ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. அதிக வயலன்ஸ் மற்றும் ரத்தம் தெறிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ள காரணத்தால் ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது, இப்படத்திற்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களிலும், ஓவர்சீஸிலும் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதன் காரணமாக, அங்கும் டிக்கெட்டுகள் பெருமளவில் புக்கிங் ஆகிக் கொண்டிருக்கிறது முதல் நாளிலே பாக்ஸ் ஆபீஸில் ரூ.100 கோடி வசூலை கூலி எட்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை மறுநாள் இப்படம் ரிலீசாகவுள்ள நிலையில், இப்படம் தொடர்பான புரமோஷனில் இசையமைப்பாளர் அனிருத் உற்சாகமாய் தெரிவிக்கையில்,

‘இந்த 13 வருடங்களில் 34 படங்கள் பண்ணியுள்ளேன். இதில், கூலி எனக்கு சிறந்த அனுபவம். நேற்று படத்துக்கான பைனல் மிக்ஸ் நடந்தது. நாகர்ஜுனா சார் ஸ்டுடியோவில் நானும், லோகேஷ் கனகராஜும் எங்களின் டிரெண்ட்மார்க் போட்டோ எடுத்தோம். அது ரொம்பவே எமோஷனலாக இருந்தது. ஒரு ரசிகனாக ‘கூலி’ படத்தினை காண்பதற்கு பெரும் காத்திருப்பில் இருக்கிறேன்’ என்றார். முன்னதாக, குறிப்பிடும்போதும் ‘கூலி’ படத்தை மிகவும் சிலாகித்துப் பேசினார் அனிருத் என்பது நினைவுகூரத்தக்கது.

anirudh spoke about coolie movie at recent event
anirudh spoke about coolie movie at recent event