CSK அணிக்கு தீம் மியூசிக் போட மறுப்பு தெரிவித்ததாக அனிருத் கூறியிருக்கும் தகவல் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பிரபல முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் அனிருத் ரவிச்சந்திரன். மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவர் தற்போது ஜெயிலர், லியோ, விடாமுயற்சி, இந்தியன் 2 உள்ளிட்ட பல டாப் ஹீரோக்களின் திரைப்படங்களுக்கு வரிசையாக இசையாமைத்து வருகிறார்.

இந்த நிலையில் இசையமைப்பாளர் அனிருத் CSK அணிக்கு புதிய தீம் மியூசிக் போட கேட்டபோது அதனை அவர் மறுத்துள்ளதாக தெரிவித்திருக்கும் தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் அவர், கடந்த 2018 ஆம் ஆண்டு CSK அணிக்கு புதிதாக கம் பேக் தீம் பாடல் கம்போஸ் பண்ணி தருமாறு CSK அணி தன்னிடம் கேட்டதாகவும், ஆனால் விசில் போடு பாடல் தனக்கே மிகவும் பிடித்த பாடல் என்பதால் அதற்கு நிகராக என்னால் தீம் பாடல் உருவாக்க முடியாது என்ற காரணத்தால் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதாக அவர் கூறியிருக்கிறார். இந்த தகவல் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வைரலாகி வருகிறது.