ஜெய்லர் திரைப்படத்தின் தீம் மியூசிக்கிருக்கு புது பிளானில் இறங்கி இருக்கும் அனிருத் குறித்த தகவலுக்கு ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

இந்திய திரை உலகில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகும் “ஜெயிலர்” திரைப்படத்தில் தனது 169 வது படத்தை நடித்து வருகிறார். அனிருத் இசையமைப்பில் உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி ஆகியோர் இணைந்துள்ளதாக அதிகாரவபூர்வமான அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி வைரலானது. இதனைத் தொடர்ந்து மேலும் சில நட்சத்திரங்களாக பருத்திவீரன் சரவணன், யூடியூப் சிறுவன் ரித்து ஆகியோ இப்படத்தில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியானதை தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட்டாக ஜெயிலர் திரைப்படத்தின் தீம் மியூசிக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் இப்படத்தின் மியூசிக்கில் அனிருத் புதிய பிளானை போட்டுள்ளார் அதாவது இந்த படத்தில் ரஜினி தோன்றும் காட்சிகளில் வெவ்வேறு தீம் பாடல்கள் இடம்பெற உள்ளதாம் இந்த தகவல் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.