நடிகை ஆண்ட்ரியாவை இசையமைப்பாளர் DSP புஷ்பா பட பாடலுக்காக கட்டாயப்படுத்தியுள்ளார்.

நடிகைகளை முன்னிலைப்படுத்தக்கூடிய சவாலான திரைப்படங்களை தைரியமாக தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகைகளில் ஒருவர் தான் ஆண்ட்ரியா. இவர் நடிகையாக மட்டுமல்லாமல் சிறந்த பாடகியாகவும் வலம் வருகிறார். இவரது நடிப்பில் தற்போது தயாராகி இருக்கும் திரைப்படம் தான் பிசாசு 2. இப்படத்தை இயக்குனர் மிஷ்கின் இயக்கியுள்ளார்.

இதனால் சமீபத்தில் பல பேட்டிகளில் கலந்து கொண்டு உரையாடி வரும் ஆண்ட்ரியா தற்போது எடுக்கப்பட்ட பேட்டியில் பல மொழிகளில் வெற்றியடைந்த பாடலான “ஊ சொல்றியா மாமா” என்ற புஷ்பா திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் பாடலை பாடியது குறித்து கூறியுள்ளார்.

அதாவது முதல் முதலில் என்னிடம் இப்பாடல் குறித்து தேவி ஸ்ரீ பிரசாத் (DSP) பேச்சுவார்த்தை நடத்திய போது என்னால் முடியாது என்று மறுத்துவிட்டேன். ஆனால் அவர் என்னை உங்களால் முடியும் நீங்கள் கட்டாயம் பாடியாக வேண்டும் என்று கட்டாயப்படுத்தியதால் மட்டுமே நான் இப்பாடலை பாட ஒப்புக்கொண்டேன் என்று அப்பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.