இயக்குனர் சுந்தர் சி யின் புதிய படத்தில் இடம்பெற்றிருக்கும் “ஜில்லு ஜக்கம்மா” என்ற படத்தின் பாடலை நடிகை ஆண்ட்ரியா பாடியுள்ளார். அப்பாடலின் லிரிக்ஸ் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    கோலிவுட் திரை வட்டாரத்தில் பிரபல நடிகர் மற்றும் இயக்குனராக திகழ்பவர் தான் சுந்தர் சி. இவர் தற்போது “வல்லான்” என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சத்யராஜின் கட்டப்பாவை காணோம் என்ற திரைப்படத்தை இயக்கிய மணி செய்யோன் இயக்கியுள்ளார். மணி பெருமாள் ஒளிப்பதிவில் தினேஷ் பொன்ராஜ் படத்தொகுப்பில் உருவாகி வரும் இப்படத்தில் சுந்தர்.சியுடன் இணைந்து தன்யா ஹோப், சாந்தினி தமிழரசன், அபிராமி வெங்கடாச்சலம், ஹெபா பட்டேல் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

    இப்படத்திற்கான படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ் தயாநிதி இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாடலான “ஜில்லு ஜக்கம்மா” என்ற பாடலின் லிரிக்ஸ் வீடியோ தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    இப்பாடலை தமிழ் சினிமாவில் பிரபல நடிகை மற்றும் பாடகியாக திகழ்ந்து கொண்டிருக்கும் ஆண்ட்ரியா பாடியிருக்கிறார் அவருடன் இணைந்து ஸ்ரீநிஷா மற்றும் ஜெயசீலன் ஆகியோரும் பாடி இருக்கின்றனர். இந்த சூப்பரான பாடலின் லிரிக்ஸ் வீடியோ யூடியூபில் வெளியாகி ரசிகர்களின் இடையே வைரலாகி வருகிறது.

    YouTube video