பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் முன்னணி தொகுப்பாளியாக இருந்து வருபவர் பிரியங்கா. இவர் இந்த டிவி சேனலில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

மேலும் விரைவில் கிங்ஸ் ஆப் காமெடி ஜூனியர் நிகழ்ச்சியின் அடுத்த சீசன் தொடங்க உள்ளது. இதற்காக கோலாகலமாக ஆரம்ப நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியை ப்ரியங்கா தான் தொகுத்து வழங்க உள்ளார், முதல் நாள் நிகழ்ச்சிக்கான கெட்டப்பை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

அந்த புகைப்படத்தின் கீழே கிங் ஆப் காமெடி ஷோ தான் அதுக்காக இப்படியா என பிரியங்காவை கலாய்த்துள்ளனர்.

இது குறித்து நெட்டிசன்கள் உங்களை கலாய்க்க நாங்க தேவை இல்லை உங்க டிவி சேனலே போதும் என கிண்டலடித்து வருகின்றனர்.