Anandha Raj : தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான ஆனந்த ராஜின் தாயார் இன்று உடல் நல குறைபாடு காரணமாக உயிரிழந்துள்ளார்.
தமிழ் படங்களில் ரஜினி, கமல் போன்ற நடிகர்களுக்கு வில்லனாக நடித்திருந்தவர் ஆனந்த ராஜ். சமீப காலமாக இவர் குணசித்திர வேடங்களிலும் காமெடி வேடங்களிலும் நடித்து வருகிறார்.
நடிகர் ஆனந்தராஜின் தாயார் ராஜமணி. 75 வயதான இவர் புதுசேரியில் இன்று காலை 11 மணியளவில் உடல்நல குறைபாடு காரணமாக உயிரிழந்துள்ளார்.
இவரது இறப்பு தகவல் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஆனந்தராஜின் தாயாருடைய இறுதி ஊர்வலம் நாளை பாண்டிசேரியில் நடைபெறும் எனவும் தகவல் கிடைத்துள்ளது.