புதிய காதலனுடன் தனது காதலர் தினத்தை கொண்டாடியுள்ளார் எமி ஜாக்சன்.

தமிழ் சினிமாவில் மதராசபட்டினம் என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் வெளிநாட்டு நடிகை எமி ஜாக்சன். இந்த படத்தை தொடர்ந்து ரஜினி, விஜய், தனுஷ் நடித்த நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள இவர் தற்போது ஏ எல் விஜய் இயக்கம் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்துள்ள எமி ஜாக்சன் ஏற்கனவே ஒருவருடன் நிச்சயமாகி இருந்த நிலையில் அவருடன் சேர்ந்து வாழ்ந்து குழந்தை பெற்றுக் கொண்டு பிறகு விவாகரத்து பெற்று பிரிந்தார்.

இதையடுத்து Ed Westwick என்பவருடன் இந்த காதலர் தினத்தை கொண்டாடி உள்ளார். அவரோடு சேர்ந்து நெருக்கமாக எடுத்துக் கொண்ட போட்டோக்களை வெளியிட்டு காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். எமி ஜாக்சன் வெளியிட்டுள்ள இந்த போட்டோக்கள் இணையத்தில் தீயாக பரவிய வருகின்றன.

https://www.instagram.com/p/CopuwMlLK_E/?igshid=YmMyMTA2M2Y=