
விரைவில் கல்யாணம் என்று எமி ஜாக்சன் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் மதராசபட்டினம் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் எமி ஜாக்சன். இதனைத் தொடர்ந்து பல நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்த இவர் பாய் பிரண்டுடன் சேர்ந்து வாழ்ந்து திருமணம் செய்து கொள்ளாமல் குழந்தை பெற்றுக் கொண்டார்.

அதன் பிறகு மீண்டும் படங்களில் நடித்து வரும் இவர் முதல் பாய் பிரண்டை பிரேக்கப் செய்து தற்போது எட் வெஸ்ட்விக் என்பவரிடம் காதலில் இருந்து வருகிறார். இருவரும் அடிக்கடி சேர்ந்து ஊர் சுற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது எமி ஜாக்சன் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் எட் வெஸ்ட்விக் என்னுடைய உணர்வுகளுடன் கலந்தவர் என தெரிவித்துள்ளார்.
திருமணம் குறித்து எமி ஜாக்சன் வெளியிட்ட இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
