பிகில் படம் மூலம் பிரபலமான அம்ரிதா அய்யர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிதந்து கொண்டே வொர்க் அவுட் செய்யும் அசத்தலான வீடியோவை பகிர்ந்திருக்கிறார்.

தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர் அம்ரிதா அய்யர். இவர் தமிழில் படைவீரன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படத்தைத் தொடர்ந்து காளி, பிகில், லிஃப்ட் போன்ற திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். மேலும் இவரது நடிப்பில் சுந்தர் சி யின் காபி வித் காதல் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் மற்ற நடிகைகளை போல் எப்பொழுதும் தனது சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் அமிர்தா அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருவார். அந்த வகையில் நடிகை அமிர்தா தற்போது வேறு ஒரு நபரின் கால்களின் மீது படுத்து கொண்டு மிதந்தபடி வொர்க்-அவுட் செய்யும் அசத்தலான வீடியோவை பகிர்ந்திருக்கிறார். அதனைப் பார்த்த ரசிகர்கள் அம்ரிதாவை வேற லெவல், சூப்பர் போன்ற பல வார்த்தைகளில் புகழ்ந்தபடி கமெண்ட்களை செய்து லைக்ஸ்களை குவித்து அந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.