அம்மு அபிராமி கதாநாயகியாக நடிக்கப் போகும் அறிமுக இயக்குனரின் படத்தைப்பற்றி படக்குழு தெரிவித்துள்ளது.

‘ராட்சசன்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் அம்மு அபிராமி. இதனைத் தொடர்ந்து அசுரன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாகவும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.  அதன்பின் அறிமுக இயக்குனரான உலகநாதன் சந்திரசேகரன் இயக்கத்தில் “காக்கி சட்டை, எதிர்நீச்சல்” படங்களில் துணை இயக்குனராகவும், தனுஷின் “கொடி’ பட்டாசு” போன்ற படங்களில் இணை இயக்குனராகவும் பணிபுரிந்திருந்த பாலமுருகன் அவர்கள் கதாநாயகனாக அறிமுகமாகும் படமான “குதுகலம்”என்ற படத்தில் கதாநாயகியாக அம்மு அபிராமி நடிக்கவுள்ளார்.

இப்படத்தில் இவர்களுடன் இணைந்துகவிதாபாரதி, புகழ், பியான், சஞ்சீவி, அனிஸ், மன்மோகித், பிரேமி, தயாரிப்பாளர் எம்.சுகின்பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். மேலும் இப்படத்தை ரெட் & கேட் பிக்சர்ஸ் சார்பில் எம்.சுகின்பாபு முதல் படமாக தயாரிக்க உள்ளார்.

இந்த “குதூகலம்” திரைப்படம் திருப்பூர் பனியன் தயாரிப்பில் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி உருவாகப் போகும் இப்படத்திற்கு பியான் சர்ராவ் இசையமைத்துள்ளார். மணி பெருமாள் ஒளிப்பதிவு செய்து வருகிறார். மேலும் இப்படத்தின் அதிகப்படியான படபிடிப்பு திருப்பூரில் வைத்து படமாக்கப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது.