பிகில் பட நடிகை அமிர்தா ஐயர் மாலையும் கழுத்துமாக இருக்கும் மணக்கோல புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

தமிழ் சினிமாவில் பிகில், லிப்ட் உள்ளிட்ட சில படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அமிர்தா ஐயர். இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் இவர் தற்போது instagram பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளன.

மாலையும் கழுத்துமாக மணக்கோலத்தில் மாப்பிள்ளை உடன் இருப்பது போன்ற புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இவருக்கு திருமண வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

இப்படியான நிலையில் ரைசா வில்சன் திருமண நல்வாழ்த்துக்கள் என கமெண்ட் பதிவு செய்ய இது என்னுடைய திருமண புகைப்படங்கள் இல்லை என அமிர்தா ஐயர் விளக்கம் அளித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.