காதலர் தினமான இன்று திருமணம் முடித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் அமீர் மற்றும் பாவனி.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பாவனி. ஏற்கனவே திருமணம் ஆன இவருக்கு இவருடைய கணவர் இறந்து தனிமையில் ஆண்டு வரும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது சக போட்டியாளரான அமீர் பாவணியிடம் தனது காதலை வெளிப்படுத்தினார்.

அதன் பிறகு இருவரும் பிக் பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சியில் இணைந்து நடனம் ஆடினர். மேலும் தங்களது காதலை இருவரும் வெளிப்படுத்தி இருந்த நிலையில் காதலர் தினம் அணை இன்று ஆங்கில பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில் தங்களது திருமணம் குறித்து பேசியுள்ளனர்.

அதாவது விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். இவர்களின் இந்த பேட்டியை பார்த்த ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.