Ameer Character in Vaadivasal Movie

வாடிவாசல் படத்தில் அமீர் நடிக்கப் போகும் கதாபாத்திரம் குறித்து தெரிய வந்துள்ளது.

Ameer Character in Vaadivasal Movie : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக எதற்கும் துணிந்தவன் மற்றும் ஜெய்பீம் என இரண்டு திரைப்படங்கள் வெளியாக உள்ளன. இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளார்.

விராட் கோலி கேரக்டர் எப்படின்னா? : மைக்கேல் வாகனின் வைரலான கருத்து

ஒரு நாவலைத் தழுவி இந்தத் திரைப்படம் உருவாக உள்ளது. இந்த படத்தில் அமீர் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவலும் அவர் இதற்கான கெட்டப்பில் இருக்கும் புகைப்படமும் வெளியானது.

காசு கம்மியாதான் வாங்குறோம்…, நாங்களும் கஷ்டப்பட்டிருக்கோம் – Senthil Rajalakshmi Emotional Speech

இப்படியான நிலையில் தற்போது இயக்குனர் அமீர் வாடிவாசல் படத்தின் மருதன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. மிக முக்கியமான கதாபாத்திரமாக இது இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் சூரியாவின் மனைவியின் அண்ணனாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாடிவாசல் திரைப்படம் சூர்யாவின் திரைப்பயணத்தில் மிக முக்கிய படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.