Amalapaul

AmalaPaul Marriage : அமலாபாலுக்கு இரண்டாவது திருமணம் நடைபெற உள்ளதை அவரே மறைமுகமாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழி படங்களிலும் பிஸியாக நடித்து வருபவர் அமலாபால். இவர் தளபதி விஜயுடன் ஜோடி சேர்ந்து தலைவா படத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தில் நடிக்கும் போது படத்தின் இயக்குனரான ஏ.எல்.விஜயுடன் காதல் வசப்பட்டு அவரை திருமணம் செய்து கொண்டு பின்னர் விவாகரத்தும் பெற்று கொண்டார்.

விவாகரத்திற்கு பின்னரும் திரையுலகில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் அமலா பால் விரைவில் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருப்பதாக சமீப காலமாக தகவல்கள் வைரலாகி வருகின்றன.

இந்நிலையில் தற்போது இது உண்மை தான் என்பது போல சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் மறைமுகமாக பதிலளித்துள்ளார்.

அதாவது முதல் திருமணம் என்னுடைய விருப்படி நடைபெற்றது. இரண்டாவது திருமணம் செய்து கொண்டால் அது என்னுடைய பெற்றோர்களின் விருப்படி தான் நடக்கும் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.