Amala Paul Gettup

Amala Paul Gettup : என்னமா இது என ரசிகர்கள் வியந்து போகும் அளவிற்கு அமலாபால் புது கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் அமலாபால். தமிழ் சினிமாவில் பெரும்பாலான முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார்.

சமீபத்தில் கூட விஷ்ணு விஷாலுடன் இணைந்து நடித்திருந்த ராட்சசன் படம் சூப்பர் ஹிட்டானது. இந்த படத்திற்கு பிறகு அமலா பால் விஷ்ணு விஷாலை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வைரலாகி இருந்தன.

ஆனால், அவை அத்தனையும் வதந்தி என விஷ்ணு விஷால் விளக்கமளித்திருந்தார். இந்நிலையில் தற்போது அமலாபால் லுங்கியில் உள்ள புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

அந்த புகைப்படம் இணையத்தில் படு வைரலாகி வருகிறது.