திருமணமான இரண்டே மாதத்தில் கர்ப்பம் ஆகி உள்ளார் நடிகை அமலாபால்.
தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பிறகு மைனா படத்தின் மூலம் மக்களின் மனதை கவர்ந்தவர் அமலா பால். இந்த படத்தை தொடர்ந்து விஜய் சூர்யா தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்களின் நடித்து வந்தார்.
இயக்குனர் ஏ எல் விஜய் காதலித்து திருமணம் செய்து கொண்ட அமலாபால் அவரை ஒரே வருடத்தில் விவாகரத்து செய்து பிரிந்து சிங்கிளாக வாங்கி வந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் அவருக்கு ஜே தெசாய் என்பவருடன் காதல் திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் தற்போது அமலாபால் கர்ப்பமாக இருப்பதாக புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.