தமிழ் சினிமாவில் ஸ்ரீ ரெட்டிக்கு அடுத்தாக சின்மயி புயல் வீசாத தொடங்கியுள்ளது. திரையுலக பிரபலங்கள் பலரின் மீது பாலியல் குற்றசாட்டுகளை முன் வைத்து வருகிறார்.

இவரை தொடர்ந்து பலரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை கூறி வருகின்றனர். இந்நிலையில் தற்போது பிரபல நடிகையான அமைரா தஸ்தூர் ஆங்கில பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் பிரபல நடிகர் மீது பாலியல் குற்றசாட்டை முன் வைத்துள்ளார்.

திரையுலகில் மிக பெரிய அந்தஸ்தில் உள்ள நடிகர் அவர், இப்போது அவர் பெயரை சொல்ல விரும்பவில்லை என கூறியுள்ளார்.

என்னுடன் நடித்த நடிகர் ஒருவர் என்னை அத்துமீறி இறுக்கி அணைத்தார். இதனால் நான் அவரை பற்றி இயக்குனரிடம் புகார் அளித்தேன்.

ஆனால் அவர் இதையெல்லாம் கண்டு கொள்ளாதே என கூறி விட்டார். என்னை பல இடங்களில் உதாசீனப்படுத்தியது மட்டுமில்லாமல் அவரிடம் மன்னிப்பும் கேட்க கூறியிருந்தார்.

விரைவில் அந்த நடிகரின் பெயரின் அறிவிப்பேன். நான் யாரை சொல்கிறேன் என்பது சம்மந்தப்பட்ட நடிகருக்கு தெரியும் என கூறியுள்ளார்.