ரீல் பாய் பிரண்டுடன் ஆலியா மானசா வீடியோ வெளியிட்டுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஆல்யா மானசா. இந்த சீரியலில் நாயகனாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அதன் பிறகு ராஜா ராணி 2 சீரியலில் நடித்த இவர் இரண்டாவது குழந்தைக்காக அந்த சீரியலில் இருந்து விலகிய நிலையில் பிரசவம் முடிந்து ஓய்வெடுத்த பிறகு தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியலில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இனியா சீரியல் நாயகன் ரிஷியுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோவை வெளியிட்டு ரீல் பாய் பிரண்டுடன் ரீல் என பதிவு செய்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் உங்க கணவர் சஞ்சீவும் தான் சீரியலில் நடிக்கிறார் அவர் இதுபோல எந்த ஒரு நடிகையுடனும் வீடியோ எடுத்து போட்டதில்லை. ஆனால் நீங்கள் ஏன் இப்படி செய்கிறீர்கள் இதெல்லாம் சரியில்லை என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

https://www.instagram.com/reel/CoUfoGvBey4/?igshid=YmMyMTA2M2Y=