தீயாக பரவி வரும் விவாகரத்து செய்திக்கு ஆலியா மானசா விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற சீரியலில் இணைந்து நடித்து ரியல் ஜோடிகளாக மாறியவர்கள் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ்.
ஆலியா இனியா தொடரில் நடித்து வர சஞ்சீவ் கயல் தொடரில் ஹீரோவாக நடித்து வருகிறார். இருவரும் இரண்டு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் நிலையில் சமீப நாட்களாக இருவரும் சேர்ந்து போட்டோ வீடியோக்கள் வெளியிடாமல் காரணத்தினால் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது.
இந்த நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார் ஆலியா மானசா. இது போன்ற விவாகரத்து வருந்திகளை பார்க்கும்போது எங்களுக்கு சிரிப்பு தான் வருகிறது. பெரிதாக ரியாக்ட் பண்ணுவதில்லை.
முதலில் நம்பியவர்கள் ஏமாற்றும் போது பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் வரும் ஆனால் இப்போது அந்த சிந்தனை கூட எனக்கு வருவதில்லை என்று ஆலியா மானசா தெரிவித்துள்ளார். இப்படி விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ஆலியா மானசா.