அட்லி இயக்கும் படத்தில், அல்லு அர்ஜுனுக்கு 4 வேடமா?

அல்லு அர்ஜுன் நடிப்பில் அட்லி இயக்கும் படத்தின் கதை ஒரிஜினல் இல்லை. விஜய்யின் ‘மெர்சல்’ படத்தை தான் தெலுங்கில் ரீமேக் செய்கிறார் என தகவல் வெளியானது. இந்நிலையில் அது வெறும் வதந்தி என்பது தெரிய வந்திருக்கிறது. அட்லி படத்தில் 4 அல்லு அர்ஜுன் வருகிறார்கள்.
தாத்தா, அப்பா, இரண்டு மகன்கள் என அல்லு அர்ஜுனை 4 கதாபாத்திரங்களில் பார்க்கலாம் என கூறப்படுகிறது. அல்லு அர்ஜுன் இதுவரை 4 கதாபாத்திரங்களில் நடித்தது இல்லை. படத்தில், 2 மகன்களாக மட்டும் அல்லு அர்ஜுனை நடிக்க வைத்துவிட்டு, தாத்தா, அப்பாவாக வேறு நடிகர்களை நடிக்க வைக்கவே விரும்பினார் அட்லி.
நானே அப்பாவாகவும், தாத்தாவாகவும் நடிக்கிறேனே. நானே 4 கதாபாத்திரங்களில் வந்தால் சிறப்பாக இருக்கும். மேலும், நான் இதுவரை ஒரு படத்தில் கூட 4 கதாபாத்திரத்தில் நடித்தது இல்லை. அதனால், என்னையே நடிக்க வையுங்கள் என விரும்பியுள்ளார் அல்லு அர்ஜுன். அவரது விருப்பம் நிறைவேறியுள்ளது என கூறப்படுகிறது.
இருப்பினும் படக்குழு உறுதி செய்யும்வரை இந்த தகவலை நம்ப முடியாது. 4 கதாபாத்திரங்கள் என்றால் இது வேற லெவல் படமாக இருக்கும் என ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம்.
மேலும், படத்தில் 5 ஹீரோயின்கள் என்று கூறப்படுகிறது. தீபிகா படுகோன் நடிப்பது உறுதியாகிவிட்டது. மிருணாள் தாகூர், ராஷ்மிகா மந்தனா, ஜான்வி கபூர் ஆகியோரும் படத்தில் இணையவுள்ளதாக சினி வட்டாரம் தெரிவிக்கிறது.
