தளபதி விஜயின் மகன் அப்பா விஜய், அஜித் மற்றும் விஜய் சேதுபதி தான் என்னுடைய பேவரைட் நடிகர்கள். இவர்களோடு இணைந்து நடிக்க ஆசைப்படுவதாக இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கேள்விக்கு பதிலளித்தாக சமூக வளையதளங்களில் தகவல்கள் வைரலாகி இருந்தன.

விஜயின் மகன் சஞ்சய் அஜித்தை பற்றி முதல் முறையாக பேசி இருந்ததால் இது பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. ஆனால் இது உண்மை இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

அதாவது விஜயின் மகன் சஞ்சய் மற்றும் அவரது மகள் திவ்யா ஆகியோர் எந்தவொரு சமூக வளையதள பக்கத்திலும் இல்லை.

இவர்களின் பெயர்களின் வரும் தகவல்களை நம்ப வேண்டாம் என விஜயின் செய்தி தொடர்பாளர் ரியாஸ் அவர்கள் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here