பாலிவுட் நடிகை ஆலியா பட் தான் கர்ப்பமாக இருப்பதை ரசிகர்களுக்கு தெரிவித்திருக்கிறார். இவர் மருத்துவமனையில் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஆலியா பட். இவர் பாலிவுட் நடிகரான ரன்பீர் கபூரை நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில் சமீபத்தில் இரு வீட்டார் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டனர். மிக பிரம்மாண்டமாக நடந்த இவர்களின் திருமணத்திற்கு பாலிவுட் திரை நட்சத்திரங்கள் அனைவரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

குட் நியூஸ் சொன்ன ஆலியா பட் - வைரலாகும் புகைப்படம்.

மேலும் இவர்களின் திருமணம் குறித்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி இருந்தது. அதன் பின்பும் ஆலியா தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது ஆலியா பட், ரன்பீர் கபூர் இருவரும் இணைந்து   “பிரம்மாஸ்திரா” என்ற ஒரு பிரம்மாண்ட படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருந்த நிலையில் ஆலியா தனது ரசிகர்களுக்கு மேலும் ஒரு “குட் நியூஸ்” சொல்லியிருக்கிறார்.

குட் நியூஸ் சொன்ன ஆலியா பட் - வைரலாகும் புகைப்படம்.

அதாவது ஆலியா பட் தற்போது கர்ப்பமாக இருப்பதை தனது ரசிகர்களுக்கு தெரிவித்திருக்கிறார். அவர் கணவருடன் மருத்துவமனையில் பரிசோதனை செய்யும் போது எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனைப் பார்த்த ரசிகர்கள் உற்சாகத்துடன் இப்புகைப்படத்தை வைரலாகி வருகின்றனர்.

குட் நியூஸ் சொன்ன ஆலியா பட் - வைரலாகும் புகைப்படம்.