அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு ஏகே 62 திரைப்படத்திற்கான அப்டேட் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டிருக்கின்றனர்.

கோலிவுட் திரையுலகில் தவிர்க்க முடியாத முக்கியமான உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். இவரது நடிப்பில் கடந்த ஜனவரி 11ஆம் தேதி பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் மெகா ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்திருந்தது.

இதனை தொடர்ந்து நடிகர் அஜித் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாக இருக்கும் “ஏகே 62” திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பிற்காக நீண்ட நாட்களாக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் ஏகே 62 திரைப்படத்திற்கான டைட்டில் அறிவிப்பை அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு மே 1 ஆம் தேதியான நாளை மாலை வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கும் ரசிகர்கள் இதனை உற்சாகத்துடன் ட்ரெண்டிங்காக்கி வருகின்றனர்.