தல அஜித் அவர்களின் ஏகே 61 திரைப்படம் குறித்த லேட்டஸ்ட் தகவல்களை நடிகை மஞ்சு வாரியர் பகிர்ந்துள்ளார். அது ரசிகர்களின் மத்தியில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் அன்போடு தல என்று அழைக்கப்படும் நடிகர் அஜித் குமார் அவர்கள் வலிமை திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் வினோத் இயக்கத்தில் உருவாகும் “AK61” என்று தற்காலிகமாக பெயர் வைத்துள்ள திரைப்படத்தில் நடித்து வருகிறார். போனி கபூர் தயாரிப்பில் ஜிப்ரான் இசையில் உருவாகும் இந்த படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக நடிகை மஞ்சு வாரியர் நடிக்க பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

பேங்க் கொள்ளையை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்பான சில முக்கிய விவரங்களை நடிகை மஞ்சு வாரியர் அண்மையில் எடுக்கப்பட்ட ஒரு மலையாள நிகழ்ச்சியில் பகிர்ந்திருக்கிறார். அது தற்பொழுது ரசிகர்களின் இடையே வைரலாகி வருகிறது.

அதில் அவர், AK61 திரைப்படத்திற்கான படப்பிடிப்பு பல்வேறு இடங்களில் மற்றும் பல்வேறு சூழ்நிலைகளில் நடந்தது. இனி அடுத்த ஷூட்டிங் செப்டம்பர் 15ஆம் தேதி ஹாங்காங்கில் நடக்க உள்ளது. என்று படப்பிடிப்பு தொடர்பான விஷயங்களை பகிர்ந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார். அந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.