ஸ்காட்லாண்டில் ரசிகர்களுடன் நடிகர் அஜித் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரசிகர்களால் அன்போடு தல என்று அழைக்கப்பட்டு வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் எச் வினோத் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான துணிவு திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லைக்கா நிறுவனம் தயாரிப்பில் உருவாக இருக்கும் ஏகே 62 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

இப்படம் தொடர்பான அதிகாரபூர்வமான அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் இணையதளத்தில் அவ்வப்போது அஜித் குமாரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்போது ஸ்காட்லாண்டில் ரசிகர்களுடன் அஜித் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையதளத்தில் ரசிகர்களால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.