நடிகர் அஜித்தை காண சென்ற ரசிகர்களுக்கு அவர் தம்சப் காட்டி ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

ரசிகர்களால் தல என்று அன்போடு அழைக்கப்பட்டு வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் தற்போது எச் வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தை தொடர்ந்து “துணிவு” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை மஞ்சு வாரியர் நடிக்க இப்படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார். வரும் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆக இருக்கும் இப்படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் வைரலானதை தொடர்ந்து தற்போது இப்படத்திற்கான இறுதி கட்ட படப்பிடிப்பு பணிகள் சென்னையில் உள்ள ஈவிபி ஃபிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஷூட்டிங்கிற்காக சென்னைக்கு அஜித் வந்திருப்பதை அறிந்த ரசிகர்கள் அவரைப் பார்ப்பதற்காக கேரவேனை சுற்றி வளைத்தனர். இதனால் நடிகர் அஜித்தும் ரசிகர்களை காண கேரவன் கதவை திறந்து கை அசைத்து விட்டு அவரது ஸ்டைலில் ‘தம்சப் காட்டி விட்டு” உள்ளே சென்றார். இதனால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கும் அஜித் ரசிகர்கள் இந்த வீடியோவை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.