மிர்ச்சி சிவா திருமணத்திற்கு தல அஜித் எத்தனை லட்சம் மொழி வைத்தார்? அதற்கான காரணம் என்ன என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Ajith’s Gift to Mirchi Siva Marriage : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். உலகம் முழுவதும் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்தநிலையில் தல அஜித் மிர்ச்சி சிவா திருமணத்திற்காக எவ்வளவு மொழி வைத்தார் என பத்திரிகையாளர் ஒருவர் கூறிய தகவல் செம வைரலாகி வருகிறது.

Ajith's Gift to Mirchi Siva Marriage

அதாவது தல அஜித் மிர்ச்சி சிவாவுக்கும் இடையே நல்ல நெருக்கம் உண்டு. மிர்ச்சி சிவா திருமணம் செய்துகொண்ட பிரியா என்பவர் ஷாலினிக்கு நெருங்கிய தோழி. இருவரும் பேட்மிட்டன் ஒன்றாக விளையாடுவதன் மூலம் நெருங்கிய தோழிகள் ஆனார்கள் என கூறப்படுகிறது.

இதன் காரணமாகவே தல அஜித் மிர்ச்சி சிவா திருமணம் முடியும் வரை பக்கத்திலேயே இருந்து நடத்தி கொடுத்தாராம். பிரியாவை தன்னுடைய குடும்பத்தில் ஒருவராக பார்த்ததால் மிர்ச்சி சிவா திருமணத்திற்கு 50 லட்சம் ரூபாய் மொழி வைத்தார் என அந்த பத்திரிக்கையாளர் அவரது யூடியூப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.