அஜித் மகள் அனோஷ்காவுக்கு இன்று 17-வது பிறந்த நாள்: தாய்மாமன் ரிச்சர்டின் இன்ஸ்டா பதிவு..

Web Ads

அஜித் மகள் பிறந்த நாளுக்கு, ரிச்சர்ட் தனது இன்ஸ்டாவில் தெரிவித்துள்ள கேப்ஷன் பற்றிப் பார்ப்போம்..

பொதுவாக, திரைப் பிரபலங்கள் தங்களது குழந்தைகளின் முகத்தை பொதுவெளியில் காட்டுவதற்கு அவ்வளவாக விரும்பமாட்டார்கள். ஆனால், அஜித்- ஷாலினி தம்பதியர் அந்த மாதிரி எல்லாம் இல்லாமல், தாங்கள் செல்லும் பொது நிகழ்ச்சிகளுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லும் சூழல் ஏற்பட்டால், குழந்தைகளின் முகத்தை மறைக்காமல் சாதாரணமாக அழைத்து வருவார்கள்.

சமீபத்தில், பேட்மிடன் விராங்கனை பி.வி. சிந்துவின் திருமணத்தில் அஜித்குமார், ஷாலினி இவர்களின் வாரிசுகளான அனோஷ்கா, ஆத்விக் என குடும்பத்துடன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

தற்போது 17 வயதாகும் அனோஷ்காவை, சிறுவயதில் இருந்து பார்க்கும் ரசிகர்கள், ‘அனோஷ்கா அப்படியே நம்ம அஜித் மாதிரி இருக்காங்க’ என்பதுதான்.

ஷாலினியை விட உயரமாக வளர்ந்து விட்ட அனோஷ்கா, இன்று தனது 17-வது பிறந்த நாளை கொண்டாடுகின்றார். ஏற்கனவே புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு வெளிநாட்டிற்குச் சென்றுள்ள அஜித் குடும்பம், அனோஷ்காவின் பிறந்த நாளையும் வெளிநாட்டில் கொண்டாடிவிட்டு, இந்தியா திரும்பவுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் ஷாலினியின் சகோதரரும் அனோஷ்காவின் தாய்மாமனுமான, நடிகர் ரிச்சர்ட் தனது இன்ஸ்டாகிராமில் அனோஷ்காவுக்கு ஒரு வயது இருக்கும்போது எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்து, பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த புகைப்படத்திற்கு 1+16 என கேப்ஷனும் இட்டுள்ளார்.

மேலும்,அஜித் ரசிகர்கள் பலரும் அனோஷ்காவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நாமும் வாழ்த்துவோம்.!

ajithkumar daughter anoushka 17th birthday in richard  wishes
ajithkumar daughter anoushka 17th birthday in richard wishes