அஜித் ஷாலினியாக ஜோடியாக ஊர் சுற்றும் பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர் நிதியில் மிகுந்த வரவேற்பை பெற்ற திரைப்படம் துணிவு. இந்த படத்தை தொடர்ந்து அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாக உள்ள தனது 62 ஆவது படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.

இந்த படத்தின் பூஜை சமீபத்தில் முடிவடைந்த நிலையில் அதற்கான அறிவிப்பு மார்ச் இரண்டாம் வாரத்தில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் அஜித் நடிகை ஷாலினியுடன் காரில் ஊர் சுற்றிய பழைய அரிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.

அஜித் மிகவும் இளமையான லுக்கில் ஷாலினியுடன் இருக்கும் இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.