Ajith Vs H.Raja : நடிகர் அஜித்திற்கு நாங்கள் நூலும் விடவில்லை, கயிறும் விடவில்லை என பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா பரப்பாக பேட்டி அளித்துள்ளார்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு, திருப்பூர் மாவட்ட அஜித் ரசிகர்கள் பாஜகவில் இணைந்தனர். அப்போது நடிகர் அஜித்தை புகழ்வது போல் தமிழிசை சவுந்தரராஜன் அவரை புகழ்ந்து பேசி தள்ளினார்.,
இந்த புகழ்ச்சி நடந்த அந்த நாளே அஜித் ஒரு அறிக்கை வெளியிட்டார்! அதில் “தனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என்றும், தன் மீதும் தனது ரசிகர்கள் மீதும் அரசியல் சாயம் பூச வேண்டாம்! ” என்றும் அஜித் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார் . தற்போது இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சென்னையில் ஒரு திருமண விழாவில் பங்கேற்ற பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில் , உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த ஸ்டாலின், அப்போது நடத்தாத கூட்டத்தை இப்போது நடத்தி என்ன ஆக போகிறது? என்று திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பினார்;
மேலும் லயோலா கல்லூரி வீதி விருது விழாவில் நாட்டின் அசோக தூண் அசிங்கப்படுத்தபட்டுள்ளது. இதில் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் எவ்வாறு பங்கு பெற்றார் என்றும் கூறினார்.
மேலும் நடிகர் அஜித் குறித்து கேள்வி எழுப்பிய போது, “நடிகர் அஜித்திற்கு நாங்கள் நூலும் விடவில்லை., கயிறும் விடவில்லை.,” என்று அதிரடியாக பதிலளித்தார். எச் ராஜாவின் இந்த பதில் தற்போது அனைவரிடத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.