அஜித் 62 பட இயக்குனரை சூசகமாக அறிவித்துள்ளது சுரேஷ் சந்திரா தரப்பு‌.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற துணிவு திரைப்படத்தை தொடர்ந்து அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார்.

திடீரென இந்த படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட இப்படத்தை இயக்கும் வாய்ப்பை மகிழ் திருமேனி பெற்றிருப்பதாக சொல்லப்படுகிறது. இன்னும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடாமல் இருந்து வரும் நிலையில் அஜித் மேனேஜர் சுரேஷ் சந்திரா அவர்களின் டி ஒன் நிறுவனம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் மகிழ் திருமேணி அவர்களுக்கு எந்த ஒரு சமூக வலைதள பக்கத்திலும் கணக்கு இல்லை. ஆகையால் யாரும் பொய் கணக்கை நம்பி ஏமாற வேண்டாம் என பதிவு செய்துள்ளது.

இதனைப் பார்த்த ரசிகர்கள் கோட் வேர்ட் அக்செப்ட்டட் அஜித் 62 படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனி தான் என்பதை மறைமுகமாக அஜித் தரப்பு அறிவித்துள்ளதாக கூறி வருகின்றனர்.

https://twitter.com/DoneChannel1/status/1627960818259341312?t=klR-8ATQcJJ2LQiDkvmE5w&s=19