தேனி மாவட்டத்தில் அஜித்திற்கு உருவ சிலை வைத்த ரசிகர்.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருக்கும் தல அஜித் குமார் அவர்கள் தற்போது வினோத் இயக்கத்தில் உருவாகும் துணிவு திரைப்படத்தில் நடித்திருக்கிறார். போனி கபூர் தயாரிப்பில் ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரகனி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

அண்மையில் இப்படத்திலிருந்து வெளியான ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான சில்லா சில்லா பாடல் இணையதளத்தை தெறிக்க விட்டதை தொடர்ந்து தற்போது அஜித்திற்கு உருவ சிலை வைத்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது. அதாவது, தேனி மாவட்டம் சின்னமனூரில் வீரம் என்னும் உணவகத்தின் உரிமையாளர் நடிகர் அஜித்திற்கு உருவ சிலை வைத்துள்ளார். அதன் புகைப்படம் இணையத்தில் வெளியாகி தல ரசிகர்களின் மத்தியில்
பயங்கரமாக ட்ரெண்டிங் ஆகி வருகிறது.