பிக் பாஸ் அமீர் மற்றும் பாவணியுடன் நடிகர் அஜித் செல்பி எடுத்துக் கொண்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் துணிவு. எச் வினோத் இயக்கத்தின் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது பாங்காங்கில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

பிக் பாஸ் அமீர் மற்றும் பாவணி உடன் செல்பி எடுத்த அஜித்.. யாருக்கு கிடைக்கும் இந்த அதிர்ஷ்டம்? வைரலாகும் ஃபோட்டோ

இந்த படத்தில் பல முக்கிய பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான டான்ஸ் மாஸ்டர் அமீர் மற்றும் சின்னத்திரை நடிகை பாவனி உள்ளிடோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

பிக் பாஸ் அமீர் மற்றும் பாவணி உடன் செல்பி எடுத்த அஜித்.. யாருக்கு கிடைக்கும் இந்த அதிர்ஷ்டம்? வைரலாகும் ஃபோட்டோ

தற்போது இவர்கள் இருவருடனும் நடிகர் அஜித் குமார் செல்ஃபி எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் நீங்க ரெண்டு பேரும் ரொம்ப லக்கி என கூறி வருகின்றனர்.