அஜித் 63 படத்திற்கு மீண்டும் சம்பளம் அதிகரிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Ajith Salary for Ak 63 Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகிய ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் துணிவு. இப்படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது.

இதனைத் தொடர்ந்து அஜித் அடுத்ததாக மைத்ரி மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனாலும் இதுவரை படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

மேலும் ஏற்கனவே இந்த படத்திற்கு அஜித்தின் சம்பளம் ரூபாய் 162 கோடியாக பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூபாய் 165 கோடி ஆக அதிகரிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.