Thala Ajith Political

Thala Ajith Political : தளபதி விஜயின் சர்கார் படத்திற்கு முன்பே தல அஜித் இலவசத்தை எதிர்த்துள்ள திரைப்பட காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருந்த படம் சர்கார்.

இந்த படத்தில் அதிமுக அரசு அளித்திருந்த இலவச மிக்சி, கிரைண்டர், பேன் உள்ளிட்ட பொருட்களை தீயில் எரித்து இலவசத்திற்கு எதிராக குரல் எழுப்பி இருந்தனர்.

இந்த காட்சி தமிழகத்தை ஆளும் கட்சியான அதிமுக அரசு தரப்பில் கடும் கண்டங்களுக்கு ஆளாகி இருந்தது. இதனையடுத்து படத்தில் இருந்த அந்த காட்சிகள் நீக்கப்பட்டன.

இந்நிலையில் தற்போது தல அஜித் நடித்திருந்த ஜனா படத்தில் அவர் இலவசங்களை எதிர்த்து பேசியிருந்த வசனம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தல ரசிகர்கள் இதனை அதிகம் ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர்.

இதோ அந்த வீடியோ :