அஜித்துடன் நடிக்க முடியாது என்ன சொன்ன நடிகையுடன் 23 வருடங்களுக்குப் பிறகு ஜோடி போட்டு நடிக்க உள்ளார் அஜித்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வலிமை திரைப்படம் வெளியானது தொடர்ந்து தற்போது வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் 61வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள 62 ஆவது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அஜித் 61 படத்தில் அவருக்கு ஜோடியாக மலையாள சூப்பர் ஸ்டார் மஞ்சு வாரியர் நடித்த 62 ஆவது படத்தில் அஜித்துக்கு ஜோடியாக யார் நடிப்பார் என்று கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்காக ஐஸ்வர்யா ராயிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

கிட்டத்தட்ட 23 வருடத்திற்கு முன்னர் இருவரும் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தில் அஜித் ஜோடியாக நடிக்க கேட்க வளர்ந்து வரும் நடிகர் என்பதால் ஐஸ்வர்யா ராய் முடியாது என கூறிவிட்டார். இப்படி அந்த நிலையில் தற்போது இவர் அஜித்துடன் 62வது படத்தில் ஜோடி சேர்ந்து நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.