
அஜித் கால் ஷூட்டுடன் காத்திருக்க சிறுத்தை சிவா வேறு நடிகருடன் இணைய முடிவெடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் சிறுத்தை சிவா. இவர் தற்போது சூர்யா இயக்கத்தில் உருவாக்கி வரும் கங்குவா என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக யாரை இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது. நடிகர் அஜித்தின் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க தயாராக இருப்பதாக தகவல் வெளியானது.
ஆனால் சிறுத்தை சிவா அடுத்ததாக அஜித்தை இயக்கும் எண்ணத்தில் இல்லை என தெரிய வந்துள்ளது. ஆமாம் கங்குவா படத்தை முடித்து மீண்டும் சூர்யாவையே வைத்து ஒரு பிரம்மாண்ட படத்தை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
அது மட்டும் அல்லாமல் இந்த படத்தை தயாரிக்க இரண்டு தெலுங்கு தயாரிப்பு நிறுவனங்கள் ரெடியாக இருப்பதாகவும் தகவல் தெரிய வந்துள்ளது. இதனால் சிறுத்தை சிவாவின் அடுத்த ஹீரோ அஜித்தா சூர்யா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
