
வலிமை படத்தில் அஜித்தின் பெயர் என்ன என்பது குறித்த தகவலை வெளியிட்டுள்ளார் நடிகை சுமித்ரா.
Ajith Name in Valimai Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை எச் வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்கிறார். மேலும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹீமா குரோஷி நடிக்க கார்த்திகேயா வில்லனாக நடிக்கிறார். யோகி பாபு, விஜய் டிவி புகழ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பிரபல நடிகை சுமித்ரா அஜித்துக்கு அம்மாவாக நடித்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு தவறானது : அமைச்சர் ராஜகண்ணப்பன்
தற்போது சுமித்ரா அளித்துள்ள பேட்டி ஒன்றில் வலிமை படத்தில் அஜித்தின் பெயர் என்ன எனக் கேட்டதற்குப் பதில் அளித்துள்ளார். அதாவது இந்த படத்தில் அஜித் அர்ஜுன் என்ற பெயரில் நடித்துள்ளதாக கூறியுள்ளார். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாகி வருகிறது.
முருதீசுவரர் திருக்கோவிலுக்கு சென்று வழிபட்ட நடிகர் சிம்பு..! | Kalakkalcinema | Tamil News | Viral
வலிமை படத்தினை தொடர்ந்து மீண்டும் வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ள அஜித் அடுத்ததாக ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.