Ajith
அஜித்தை நடிக்க கமிட் செய்து விட்டு வேண்டாம் என இயக்குனர் ஒருவர் கூற அஜித் தான் வாங்கிய பணத்தை வட்டியுடன் திரும்பி கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித், இவரது நடிப்பில் இதுவரை 59 படங்களில் நடித்துள்ளார். தற்போது 60-வது படமான வலிமையில் நடித்து வருகிறார்.

மேலும் இவர் சில படங்களை தவறவும் விட்டுள்ளார், அப்படி தவற விட்ட படங்களில் ஒன்று தான் எஸ்.ஜே சூர்யா இயக்கி நடித்த நியூ.

ஆம், முதலில் இந்த படத்தில் அஜித்தும் ஜோதிகாவும் தான் நடிக்க இருந்தார்களாம், திடீரென எஸ்.ஜே சூர்யாவுக்கு நடிப்பின் மீது ஆசை வர இந்த படத்தில் தானே நடிக்கலாம் என முடிவு செய்துள்ளார்.

இதனை எஸ்.ஜே சூர்யா அஜித்தை நேரில் சந்தித்து கூறி மன்னிப்பு கேட்டுள்ளார். அஜித்தும் இதனை பெருந்தன்மையாக ஏற்று கொண்டு வாங்கிய பணத்தை வட்டியுடன் திருப்பி கொடுத்துள்ளார்.

அதன் பின்னர் இந்த படத்தில் எஸ்.ஜே சூர்யாவுக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.