Ajith Marriage

Ajith Marriage : நடிகையை மட்டும் திருமணம் செய்து கொள்ளாதே என அஜித்திற்கு அறிவுரை வழங்கியுள்ளார் பிரபல நடிகர் ஒருவர். இதனை பற்றி அவர் அளித்துள்ள பேட்டியில் பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித்துடன் பல படங்களில் இணைந்து நடித்திருப்பவர் ரமேஷ் கண்ணா. இவர் திருமணம் ஆவதற்கு முன்னர் அஜித்திற்கு சில அட்வைஸ்களை வழங்கியுள்ளார்.

அதாவது அமர்க்களம் பட ஷூட்டிங் போது ரமேஷ் கண்ணா நடிகைகளை மட்டும் ஒரு போதும் கல்யாணம் பண்ணிடாத, அது விவாகரத்துல தான் முடியும் என கூறியுள்ளார்.

ரமேஷ் கொடுத்த அட்வைஸை பார்த்த அப்படத்தின் இயக்குனர் சரண் அவரை அழைத்து ஆஜித் ஷாலினியை காதலித்து வருவதாக கூறியதை கூறியுள்ளார்.

அதனை கேட்டு அதிர்ச்சியான ரமேஷ் கண்ணா அதன் பிறகு அஜித்தின் திருமணத்திற்கு சென்று மனதார வாழ்த்தி விட்டு வந்ததாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

இவர் அஜித்துடன் நடித்தது மட்டுமில்லாமல் அஜித்தை வைத்து தொடரும் என்ற படத்தையும் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.