தல அஜித்தின் துணிவு திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ ட்ரெண்டிங்காகி வருகிறது.

ரசிகர்கள் மத்தியில் தல என்று அன்போடு அழைக்கப்பட்டு வருபவர் நடிகர் அஜித் குமார். இவரது நடிப்பில் கடந்த மாதம் 11-ம் தேதி வெளியான துணிவு திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்து திரையரங்குகளை தெறிக்கவிட்டு வருகிறது. வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் வெளியான இப்படத்தில் மஞ்சு வாரிய சமுத்திரகனி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

ஜிப்ரான் இசையமைப்பில் உருவாகி இருந்த இப்படத்தின் மேக்கிங் வீடியோக்கள் அண்மையில் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வந்ததை தொடர்ந்து தற்போது இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் காருக்குள் இருக்கும் தல அஜித்தின் அன்சீன் புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டிங்காகி வருகிறது.