ஸ்காட்லாண்டில் உள்ள லாக்கர்பி நினைவிடத்தில் அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

கோலிவுட் திரை உலகில் அல்டிமேட் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் கடந்த மாதம் வெளியான துணிவு திரைப்படம் மெகா பிளாக்பஸ்டர் ஹிட் அடுத்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அஜித் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் உருவாக இருக்கும் ஏகே 62 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். அதற்கு முன்பு சிறிது ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் நடிகர் அஜித் தற்போது ஸ்காட்லாண்டில் தனது சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

அந்த வகையில் ஸ்காட்லாண்டில் உள்ள தமிழ் ரசிகர்களுடன் அவர் எடுத்துக் கொண்டுள்ள லேட்டஸ்ட் போட்டோஸ் இணையதளத்தில் ரசிகர்களால் வைரலாகி வந்த நிலையில் தற்போது ஸ்காட்லாண்டில் உள்ள லாக்கர்பி விமான பேரழிவில் இறந்தவர்களின் நினைவிடத்தில் நடிகர் அஜித் மரியாதையை செலுத்தி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.