நடிகர் அஜித் குமாரின் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரலாகி வருகிறது.

கோலிவுடில் அசைக்க முடியாத உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். இவரது நடிப்பில் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் பொங்கல் பண்டிகைக்கு வெளியான துணிவு திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்து இருந்தது. இதன் வரவேற்பை தொடர்ந்து தற்போது அஜித் தனது 62 ஆவது திரைப்படமாக லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாக இருக்கும் விடாமுயற்சி படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இதன் அதிகாரவபூர்வமான அறிவிப்பை அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு அறிவித்திருந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்கப்படும் என கூறப்பட்டு வரும் நிலையில் பைக்கில் டூர் சென்றிருக்கும் நடிகர் அஜித்குமாரின் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த வகையில் தற்போது கேரளாவில் இருந்து வரும் நடிகர் அஜித்குமார் அங்குள்ள ரசிகர்களுடன் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் ட்ரெண்டிங்காகி வருகிறது.