முதலமைச்சர் ஸ்டாலின் உடன் அமர்ந்து CSK விளையாட்டை சேப்பாக்கம் மைதானத்தில் கண்டு களித்த அஜித் குடும்பத்தினரின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் துணிவு திரைப்படத்தின் வரவேற்பு தொடர்ந்து அடுத்த கட்டமாக ஏகே 62 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படம் குறித்த அப்டேட்டிற்காக ரசிகர்கள் வெகு நாட்களாக காத்துக் கொண்டிருக்கும் நிலையில் அஜித் குடும்பத்தினர் நேற்றைய முன்தினம் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் விளையாட்டை நேரில் சென்று கண்டு களித்திருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

அதாவது, ஐபிஎல்-லில் சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் இடையேயான போட்டி நேற்றைய முன் தினம் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எளிதாக வெற்றி பெற்றது.

இதனை நேரில் காண சேப்பாக்கம் மைதானத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்டிருந்தனர். அதிலும் குறிப்பாக முதலமைச்சர் ஸ்டாலினும் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டிருந்தார். அப்போது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அருகில் அஜித் குடும்பம் அமர்ந்து மேட்ச் பார்த்துள்ளனர். அதன் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் பகிரப்பட்டு ட்ரெண்டிங்காகி வருகிறது.